பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் சார்பாக "பள்ளி செல்வோம்" விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் போது கல்வி பற்றியை விழிப்புணர்வை பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற தலைப்பில் கல்விக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 13ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் "காக்சிங் சோரா" ஆரம்பப்பள்ளியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முஃப்தி அர்ஷத் ஹுஸைன் தலைமை தாங்கி நடத்தி தந்தார். சமூக சேவகர் முஹம்மது அப்துர்ரஹ்மான், ஹாஜி அப்துல் குத்தூஸ் ஹாஜி சிராஜ் அஹமது போன்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களோடு கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களோடு கலந்து கொண்டனர்.