நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 14 மார்ச், 2012

பலிகடா ஆக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த குறும்படங்கள் வெளியீடு


ஹைதராபாத் : ஹைதராபாத்தைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றின் சார்பாக கடந்த திங்கள் அன்று மஹபூப் ஹுசைன் ஜிகர் அரங்கில் முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு இந்தியாவில் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
பலிகடா ஆக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள்
‘ஆஃப்டர் தி ஸ்ட்ரோம்’ (After the Storm) மற்றும் ‘அவுட் ஆஃப் கோர்ட் செட்டல்மென்ட்’ (Out of Court Settlement ) ஆகிய இக்குறும்படங்களே திரையிடப்பட்டது.
சுப்ரதேப் சக்கரவர்த்தி என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படங்களை காவல்துறை பொது இடத்தில் திரையிட அனுமதி மறுத்துவிட்டது.
‘ஆஃப்டர் தி ஸ்ட்ரோம்’ படத்தின் சாராம்சமானது ‘ஹைதராபாத்தைச் சேர்ந்த 3  இளைஞர்கள், குஜராத்தைச் சேர்ந்த 2 பேர், பெங்களூரை சேர்ந்த ஒருவர் மற்றும் கல்கத்தாவை சேர்ந்த ஒருவர் ஆகிய 7 முஸ்லிம் இளைஞர்ககளை காவல்துறை போலி வழக்குகள் புனைந்து சிறையில் அடைத்துவிடுகிறது.
முக்தார் அஹமத் என்பவரின் மீது சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தைக் குண்டு வைத்து தகர்த்ததாக பொய் குற்றம் சாட்டப்பட்டு 14 வருடம் சிறையில் வாடிய பின் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்படுகிறார்.
கொல்கத்தா அமெரிக்க வர்த்தக வளாகத்தை தகர்த்தாக மஸர்ரத் ஹுசைன் மீது குற்றம் சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறையில் வாடிய பின் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார்.
மேலும் ஹாரிஸ் மற்றும் ஒமர் ஃபாரூக் ஆகியோர் முறையே 6  மற்றும் 4 ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்தப் பின்னர் சமூகத்தாலும் தங்களின் உறவினர்களாலும் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதையும் இந்த குறும்படம் விளக்குகிறது.
மற்றொரு குறும்படமான ‘அவுட் ஆஃப் கோர்ட் செட்டல்மென்ட்’ குறும்படம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதை எதிர்த்து போராடும் வழக்கறிஞர்களின் நிலை குறித்து விளக்கியுள்ளது.
ஃபாஹீம் அஸ்மி என்னும் இளைஞருக்காக போராடியதற்காக ஷாஹித் அஸ்மியும் மற்றும் இன்னொரு வழக்கறிஞரான நௌஷாத் காசிம் என்பவரும் படுகொலை செய்யப்படுகிறார்கள். இவர்களை கொலை செய்தது வேறு யாருமல்ல உளவுத்துறையும் காவல்துறையும் என்பது தெரியவருகிறது. மேலும் இந்த குறும்படம் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் அல்ல என்ற ராம்ஜெத் மலானியின் கருத்தையும் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குறும்படத்தை திரையிட சியாசத் என்னும் இணையதள பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.