புதுடெல்லி: இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதான பிரபல பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மது கஸ்மிக்கு நீதி கோரி டெல்லி இந்தியா கேட்டில் மெழுகு திரி ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
கஸ்மியின் குடும்பத்தினருடைய அழைப்பை ஏற்று நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் அடங்கிய நூற்றுக்கணக்கானோர் இந்தியா கேட்டில் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர். மாலை ஏழு மணிக்கு துவங்கிய போராட்டம் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.