நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 11 மார்ச், 2012

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமம்- ஆர்.எஸ்.எஸ்


புதுடெல்லி : 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
RSS slams BJP for UP debacle
ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் அதே நிலைமை பா.ஜ.கவுக்கும் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களை விட பா.ஜ.கவில் தலைவர்கள்தாம் அதிகம். உ.பியில் மக்களுடனான உறவை பா.ஜ.க இழந்துவிட்டது’ என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.
2007 உ.பி சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற சீட்டுகளை விட தற்பொழுது 4 இடங்கள் குறைவாகவே பா.ஜ.க வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உ.பி தேர்தலில் 47 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன.