புளியங்குடி: நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக புளியங்குடியில் வைத்து ஏன் பாப்புலர் ஃப்ரண்ட்? துவக்க நாள் பொதுக்க்கூட்டம் 14 - 10 - 12 ஞாயிற்றுக்கிழமை அன்று 6.45 மணியளவில் நடை பெற்றது. இதில் புளியங்குடி நகரபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருத்தீன், தேனீ ஆண்கள் அறிவகம் முதல்வர் மகபூப் அன்சாரி பைஸி மற்றும் எஸ் .டி .பி.ஐ கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். சகோ .முஹம்மத் அலி ஜின்னாஹ் அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.