நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 1 மார்ச், 2013

வி.களத்தூரில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையில் அடைப்பு :சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் தர்ணா போராட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார்கள் . 
பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது :" கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒருதலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜாசேகர் நடந்துள்ளார். இந்நிலையில் பதட்டம் நீடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 25.02.13 அன்று அதே பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கையாலாமல் அமைதிக்கூட்டத்தை அடையாளத்திற்காகவும், பொய்வழக்குகளிட்டு, சோதனைச்சாவடி அமைத்து அடக்குமுறையை ஏற்படுத்தி இரு தரப்பினரக்கு இடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், தங்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காது நாங்களும் குடிமக்களா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து வி.களத்தூர் மக்கள் கடந்த 25.02.13 அன்று ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் .எனவே, தமிழக அரசுநேரடியாக தலையிட்டு இருசமூகத்தினருக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதோடு, முஸ்லிம் விரோத போக்குடன் நடக்கும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் RDO ரேவதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்கள் மீது பொய் வழக்கிட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 7 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது " என்றார் . இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் எஸ்.இல்யாஸ் , முகம்மது ரசீன் , திருச்சி மாவட்ட தலைவர் அமீர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர் .

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT IN SUNTV POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT

வி.களத்தூரில் நடைபெற்ற ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் 

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பல வருடங்களாக இந்து அமைப்பினர் அடிக்கடி கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் சென்று தொழுகை நேரத்தின் போது பள்ளிவாசலின் முன்பு கொட்டு அடித்தும்,விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பியும் தொழுகைக்கு இடையுறு ஏற்படுத்துவதால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.இரண்டு மாதத்திற்கு முன்பு இந்து அமைப்பினர் ஐயப்ப சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து பிரச்சினையை ஏற்படுத்தினர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில்(PEACE MEET) எந்த ஒரு முடிவும் எட்டபடாத நிலையில் பிப்ரவரி 6,2013 வரை ஊர்வலம் செல்ல தடை இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 24 அன்று கல்யாண ஊர்வலம் என்ற பெயரில் ஊர்வலமாக வந்து மகரிப் தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தி முஸ்லிம்களை கடுமையாக தாக்கினர். இதில் தொழுகைக்கு வந்த 6 க்கும் மேற்பட்ட நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்கள் வந்த காரை அடித்து உடைத்தனர் .அவர்கள் தப்பித்து ஓடி விட்டனர். இதனால் அடுத்த நாள் காலை பஜர் தொழுகைக்கு சென்றவர்களையும்,பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த முஸ்லிம் மாணவர்களையும் கைது செய்து 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட ரீதியாக உதவியும், ஜனநாயகரீதியில் ஆர்ப்பாட்டமும் செய்தது. 1200 க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அப்பாவிகளை விடுதலை செய்யக்கோரியும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்து கைதாகி சிறிது நேரத்தில் விடுதலை ஆகினர். பிரச்சினை நடந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் மீண்டும் இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்ல காவல் துறை அனுமதித்து உள்ளனர்.

எனவே இதனை கண்டித்து பெரம்பலூர் வி.களத்தூர் பகுதி மக்கள் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வாங்க மறுத்துவிட்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் ஊர்மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT




 
முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் 28.02.2013 அன்று வி.களத்தூருக்கு நேரில் சென்று ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்து பினனர் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் அப்பொழுது உடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர் 


 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT

 POPULAR FRONT OF INDIA TAMILNADU STATE PRESIDENT