கடையநல்லூர் :- SDPI கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 24-02-2013 அன்று மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான்
பாக்கவி தலைமையில் நடைபெற்றது.
இதில் மேற்கு மாவட்ட தலைவராக ஜாபர் அலி உஸ்மானி, துணைத் தலைவராக A.யாஸர் கான்,மற்றும் ஹஸன் முகம்மது, பொதுச் செயலாளராக தென்காசி சையது அலி, செயலாளர்களாக நாகூர் கனி, A.ஹக்கிம், அஜிஸ் ஆகியோரும், பொருளாளராக S.நயினா முகம்மது (எ) கனி அவர்களும் தேர்தெடுக்கப்பட்டனர்.
மாநில தலைவர் மற்றும் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் |
1) ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பை
இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இக்குண்டுவெடிப்பில் ஈடுபட்ட உண்மை
குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்து நீதி விசாரணை மூலம் தண்டிக்க வேண்டும்.
2) தொடர்ந்து நீண்டகாலமாக நடைபெற்று வரும் தென்காசி
மேம்பால பணிகளை போர்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மேம்பால வேலை முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவரும் சூழலையும், மிகுந்த சிரமத்தை
மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதையும் அரசு கவனத்தில் கொண்டு அதற்கான வேலைகளை
உரிய வேகத்தில் செயல்படுத்த வேண்டும்.
3) செங்கோட்டை-சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை
எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் நெருக்கடியாகவே செல்கிறேது. எனவே, ரயில்வே
அமைச்சகம் பயணிகளின் தேவையையும், ரயில்வே துறையின் வருமானத்தையும், கருத்தில் கொண்டு
வாரம் ஒருமுறை நிரந்தரமாக சிறப்பு ரயில் இயக்குவதோடு, தினமும் பகல் நேர ரயிலை
சென்னைக்கு இயக்க வேண்டும்.
4) தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும்
பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை இப்பொதுகுழு கவலையுடன் நினைவு கொள்கிறது. ஆசிட்-ஆயூத
தாக்குதல் என பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தொடர்பான தாக்குதல்களை வன்மையாக
கண்டிக்கிறது. மேலும் காவல்துறை இது போன்ற தவறுகளை செய்பவர்களை கைது செய்து
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தமிழக அரசு இதற்கான தண்டனைகளை கடுமையாக்கி பெண்களின்
கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு திர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இறுதியாக பொதுச் செயலாளர் தென்காசி சையது அலி நன்றி கூறினார்.