திருச்சி:- பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறேன் என்ற பெயரால் நாடகமாடிய சங்கரராமன் கொலைக் குற்றவாளியான காஞ்சி காமகோடி சங்கரச்சாரியார் தனது உளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.
ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் ராமர்கோயிலை கட்டமுடியும் என்று நேற்று திருச்சியில் துவங்கிய ஹிந்துத்துவா துறவியர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.
திருச்சி திருவானைக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற துறவியர் மாநாட்டுக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
ஹிந்து சமுதாயத்திலுள்ள பல்வேறு அமைப்புகள் எல்லோரும் குழுவாக சேர்ந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும். அந்த வகையில் எல்லோரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் இங்கு ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.
ஹிந்துக்களில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அனைவரும் ஹிந்துக்கள் என்ற உணர்வுடன் இருந்து, ஒருங்கிணைந்து வாக்களிக்க வேண்டும். ஒத்தக் கருத்துடன் அனைவரும் இருந்து நல்ல அரசை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் இவ்வாறு சங்கராச்சாரி பேசியுள்ளார்.