நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 2 மார்ச், 2013

புதுவை சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்குண்டு வைத்த பயங்கரவாதி கைது!

புதுவை:மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டுள்ளார். 
மும்பையில் இருந்து புதுவை வந்த ரெயிலில் வெடிகுண்டு
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது.


இதுதொடர்பாக சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே திருச்சி போலீசார் ஆரணி துறையூரை சேர்ந்த சிவசங்கர் (வயது-36)  என்ற வாலிபரை மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.  அப்போது சிவசங்கரிடம் விசாரணை நடத்திய போது புதுவை ரயிலில் வெடிகுண்டு வைத்தது’ நான் தான்’ என்று கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இத்தகவலை புதுவை போலீசாருக்கு அளித்தனர்.

இதையடுத்து புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

 “குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும்” விசாரணையில் கூறி இருக்கிறான். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா?  போன்ற விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எஞ்சியுள்ள இன்னும் 2 நாட்கள் விசாரணையில் இவை தெரியவரும்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அதன் வெளிப்பாடு???