நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 22 அக்டோபர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் உருவான விதம்



நம் இந்திய நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், வறுமையை போக்கவும்,  பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றவும் தவறி வருகிறது.

நம் நாடு சுதந்தரிமடைந்த பிறகு பெரும் வியாபார முதலீட்டாளர்கள் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தாலும் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.

பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆட்சி செய்து வரும் அரசாங்கங்களோ ஜனநாயகம் என்று  அழைக்கப்படக்கூடிய "மக்களாட்சி" தத்துவத்தை சீர்குலைத்து சர்வதிகாரம் போன்று செயல்பட்டு வருகின்றனர். காலணி ஆதிக்க சக்திகளுடனும், ஃபாஸிச சக்திகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.

தலித்துக்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களுடைய கலாச்சாரங்களை பின்பற்றுவதற்க்கு கூட முடியாத சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. சுரண்டல்களுக்கு எதிராகவும், லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்களுக்கு எதிராக எந்த ஒரு கடுமையான நடவடிக்கையை எடுக்கவும் அரசு தவறி வருகிறது. இதனால் நாட்டின் முழுமையான வளர்ச்சி தடைப்பட்டுவருகிறதை காணலாம். இதனை மாற்றுவதற்கும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியான வலிமையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகிறது. சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கிடைப்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடும்.

2006 ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூரில் தென்னிந்திய கவுன்சில் சார்பாக ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இதிலே பல சமூக ஆர்வளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். அந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, அதில் குறிப்பாக சமுதாய மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்று எடுக்கப்பட்டது.

மத்திய அரசு மேற்படிப்புக்கான இடஒதுக்கீடை அறிவித்தவுடன் இந்த கவுன்சில் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் கருத்தரங்களை நடத்தியது.

கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி (K.F.D) - கர்நாடகா
நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் (N.D.F) கேரளா
மனித நீதி பாசறை (M.N.P) - தமிழ் நாடு


ஆகிய அமைப்புகள் இந்த கவுன்சிலில் அங்கம் வகித்தனர். இம்மூன்று அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் முக்கிய அலோசனை செய்து ஒன்று சேர முடிவெடுத்தனர்.  இதன் அடிப்படையில் இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக இம்மூன்று அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்கிற தேசிய அமைப்பை ஏற்படுத்தினர்.

8 மாநில அமைப்புகளின் தலைவர்வர்கள் தங்களது இயக்கத்தை பாப்புலர் ஃப்ரண்டோடு இணைத்த வரலாற்று சிறப்புமிக்க காட்சி!


சிட்டிசன் ஃபாரம் - கோவா
கம்யூனிட்டி சோஷியல் அண்டு எடுகேஷனல் சொசைட்டி - ராஜஸ்தான்
நாகரிக் அதிகார் சுரக்ஷா சமிதி - மேற்கு வங்காளம்
லிலோங் சோஷியல் ஃபாரம் - மணிப்பூர்
அஷோசியேஷன் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் - ஆந்திரா


ஆகிய அமைப்புகளும் 2009 ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு தங்களை இணைத்துக்கொண்டது.  பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.