முப்பது இலட்சம் ஹாஜிமார்கள் பரிசுத்தமான ஹஜ் நற்செயலின் பாதுகாப்பு விசயங்களில் சிறிதி கவனம் இருந்தால் விபத்துகளை அதிகமாக குறைக்கவும், சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் ஆக்கவும் முடியும். கடந்த ஏழு வருட காலம் ஹாஜிமார்களுக்கு உதவிகள் செய்வதற்காக மக்கா, மதீனா, மற்றும் மினாவில் தன்னார்வ தொண்டர்களின் (வாலண்டியர்ஸ்களின்) மூலம் ஹாஜிமார்களுக்காக பெரும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்ற இந்தியா ஃப்ரடர்ணிட்டி ஃபாரம் ( INDIA FRATERNITY FORUM) கடந்த வருடங்களில் செய்த ஹஜ் வாலண்டியர்ஸ் சேவைகளை விரிவாக அலசி ஆராய்ந்ததில் கிடைத்த முன் அனுபவத்தின் அடிப்படையில் ஹாஜிமார்களுடைய பாதுகாப்பிற்காக தயாராக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டிய விஷயங்களை இந்த புத்தகம் உட்படுத்தியுள்ளது.
இஸ்லாத்தின் நம்பிக்கையின் அடிப்படை மற்றும் நற்செயல்களின் வரிசையில் ஐந்தாவது கடமை ஹஜ் ஆகும். ஆரோக்கியமும் பொருளாதாரமும் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். அந்த வாய்ப்பை நீங்கள் கிடைக்கப் பெற்றுள்ளீர்கள். மக்பூலும் மப்ரூருமான ஹஜ்ஜிற்கு பதிலாக சுவனம் என்பது நிச்சயம் என்கிற குர்ஆனின் திருவசனத்தை முன் வைத்து உலகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகின்ற நம்பிக்கையாளர்களுடன் அரஃபாவில் ஒன்று கூடவும் அதன்படி அல்லாஹ்வின் திருப்தியும் பாவமன்னிப்பும், தூய்மையான மனதையும் பெற்று, ஏற்புடைய ஹஜ்ஜை நிறைவேற்றி பாதுகாப்பாக குடும்பத்தை வந்தடையவும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணைபுரியட்டும் என்று பிரார்திக்கின்றோம்.
ஹஜ்ஜின் நேரட்தில் விபத்துகளை பற்றி அறிகின்ற ஹாஜிமார்களுக்கு கவலையும் பயமும் ஏற்படுவதுண்டு, பல்வேறு நாடுகளிலிருந்து வந்து சேர்கின்ற முப்பது லட்சம் ஹாஜிமார்களுடன் சேர்ந்து போகும் போது சில சிரமங்கள் ஏற்படுவது இயற்கையேயாகும். ஆனால், அதனை நாம் கவனித்தால் அவைகளை குறைக்கவும் சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் ஆக்கவும் செய்யலாம்.
கடந்த ஏழு வருடமாக ஹாஜிமார்களின் சேவைக்காக மக்காவிலும், மதீனாவிலும், மினாவிலும் வாலண்டியர்ஸ்கள் ஏற்பாடு செய்கின்ற இந்தியா ஃப்ரடர்ணிட்டி ஃபாரம் கடந்த வருடங்களில் சேவை செய்த அனுபவத்தின் அடிப்படையில் ஹாஜிமார்களுடைய பாதுகாப்பு பற்றி நாம் கண்டு கொண்ட, ஏற்றுக் கொள்ளக்கூடிய சில விஷயங்களை நாம் இந்த புத்தகத்தில் உட்படுத்தியுள்ளோம்.
ஹஜ்ஜிற்காக புறப்படும்போதே ஹஜ்ஜோடு சம்பந்தமாக கவனிக்கபட வேண்டிய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான, அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள், ஜித்தா, மதீனா விமான நிலையங்களிலுள்ள நடைமுறைகள் மக்காவிலும், மதீனாவிலும் தங்குமிடங்களில் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் மினா, அரஃபா, முஜ்தலிபா, ஆகிய இடங்களில் பிரவேசிக்கும் போது முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் அந்த இடங்களிலுள்ள மெடிக்கல், கிளினிக்குகள், ஆஸ்பித்திரிகள், இந்திய ஹஜ் கமிட்டி பற்றிய விபரங்கள் போன்றவைகளை பற்றி புரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கும்
ஹஜ் சேவையில் ஃபரடர்னிட்டி ஃபாரத்திற்கு ஜித்தவிலுள்ள இந்தியன் கன்சலேட் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் இந்த புத்தக வெளியீட்டிற்கு உந்துதலாக இருந்தது. ஹஜ்ஜைப்பற்றியும் நற்செயல்கள் பற்றியும் புத்தகங்கள் அதிகமாக கிடைக்குமென்றாலும், பாதுகாப்பு சம்பந்தமான இது போன்ற புத்தகம் ஹாஜிமார்களின் சந்தேகங்கள் மற்றும் கவலையை மாற்றவும் ஹஜ், நற்செயல்களை இலகுவாக்குவதற்கும் உபயோகப்படும் என்கிற எதிர்பார்ப்போடும் பிரார்த்தனையோடும்…
சிரமங்களும், விபத்துகளுமில்லாத மக்பூலும், மப்ரூருமான ஹஜ்ஜை நிறைவேற்றி குடும்பத்தை வந்தடைய நீங்கள் உட்பட எல்லா ஹாஜிமார்களுக்கும் இந்த கையேடு உதவி செய்யட்டும் என்று, மேலும் ஒரு முறை பிரார்தித்துக் கொண்டு இந்த கைப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.
இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபாரம், ஜித்தா
25, செப்டம்பர் 2011
குறிப்பு: சென்னையில் இருந்து செல்லும் ஹாஜிகளுக்கு இந்த கையேடு விமான நிலையத்தில் வைத்தே அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.-PFI Chennai