டாக்டர். பெரியார்தாசன் என்ற அப்துல்லாஹ் அவர்கள் ஒரு நல்ல மனிதர், சிறந்த மருத்துவர், கலை நயம் உடையவர் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை பகுத்தறிவு கொள்கையை சுமந்து சமூக நீதிக்காக பாடுபட்டவர்.தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாட்களில் (சுமார் 1254) இயற்கை மார்க்கத்தை எற்று கொண்டு அதன் தூய்மைதன்மையை மக்களிடையே சுழலாக பறைசாற்றும் அழைப்பாளராகவும் திகழ்ந்தவர். அவரின் மரண செய்தி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்) பெரும் வருத்ததை எற்படுத்தியது.
அவரது மரணம் சமூக பணிகளிலும் அழைப்பு பணிகளத்திலும் பெரும் இழப்பே. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அல்லாஹ் அவருடைய நற்செயலை எற்றுக்கொண்டு மறுமையில் வெற்றியை தந்தருள்புரிவானாக! என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு.