திருவாரூர் : காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை தற்போது உள்ள மீட்டர் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றக்கோரி எஸ்டிபிஐ சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நேற்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் தலைமேயேற்று அகலப் பாதைக்கான பணியை மேற்கொள்ளாத தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
பின்னர் திருவாரூர், நாகை, தஞ்சை மற்றும் தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த SDPI யினர் கண்டன கோஷங்கள் எழுப்பிவாறு திருவாரூர் ரயில்வே நிலையம் சென்றடைந்தனர். ஆனால் காவல் துறையினர் SDPI தொண்டர்களை ரயில்வே நிலையம் உள்ளே விடாதவாறு வெளியே தடுத்து அனைவரையும் கைது செய்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் சில படங்கள்