நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ஆந்திர பாப்புலர் ஃப்ரண்ட் பொதுக்குழு வலியுறுத்தல்


குர்னூல்: ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் 26 மற்றும் 27 ஆகிய இருதினங்களுக்கு நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சகோதரர் அனீஸ் அஹமது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
SGA leaders in Stage
பாப்புலர் ஃப்ரண்டின் ஆந்திர மாநில நிர்வாகிகள்
இப்பொதுக்குழுவிற்கு தலமைவகித்து தலைமை உரையாற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் ஆந்திர மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது ஆரிஃப் அஹமது. மாநில பொதுச்செயலாளர் டி.எஸ். ஹபீபுல்லாஹ் அவர்கள்
மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் பிரச்சாரத்திற்கான ஒரு வருடகால அறிக்கையை சமர்பித்தார். அதனை தொடர்ந்து ஆண்டறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவின் போது தேர்தல் நடைபெற்று அதன் மூலம் சகோதரர் அப்துல் வாஹித் புதிய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக வலையமைப்பு மற்றும் சமூக இயக்கம் ஆகிய இருதலைப்புகளிலும் வகுப்பு நடைபெற்றது.
NEC members Anees Ahmed at SGA
தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது உரையாற்றுகிறார்
பொதுக்குழுவின் இரண்டாம் நாள் தற்போதைய காலச்சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு உறுப்பினர்களுக்கு மத்தியில் விரிவான விவாதம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்: இதனால் வரை மாநில அளவில் முஸ்லிம்களுக்கென்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் சராசரி வெறும் 4% மட்டுமே. ஆந்திராவில் வாழக்கூடிய முஸ்லிம்களின் விகிதாச்சாரத்தை கணக்கிடும் போது 4% என்பது மிகக்குறைவு. எனவே இதனை 10% உயர்த்த வேண்டுமென மாநில அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

2. 
முஸ்லிம்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் பட்ஜட் நிதியை அதிகரிக்க வேண்டும்:காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெற்று மாநிலமான ஆந்திராவில் முஸ்லிம்களின் நலனுக்காக குறைவான தொகையே ஒதுக்கப்பட்டு வருகிறது. இது மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில நலதிட்ட உதவிகளை தவிற வேறு எந்த பெரும் உதவியும் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைப்பதில்லை. மாநில அரசாங்கம் இதில் பாரபட்சமான நிலையை கடைபிடித்து வருகிறது. ஒட்டு மொத்த  மாநிலத்திலும் ஒதுக்கப்படும் நிதியில் வெறும் 0.34% மட்டுமே முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்படுகிறது. எனவே மாநில இதனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் உதவித்தொகை வழங்குவதில் கூடுதல் உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
3. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் உடனே வாபஸ் பெறப்பட வேண்டும். பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சத்துடன் செயல்பட்ட மாநில அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பொய்வழக்கில் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அனைவருக்கும் உரிய நஷ்டஈட்டை உடனே மாநில அரசு வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 4. ஆந்திர மாநில காவல்துறையில் ஃபாசிஸ சிந்தனை கொண்ட சில கருப்பு ஆடுகள் நுழைந்து மாநில அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களில் முதலாவதாக டி.ஜி.பி தினேஷ் ரெட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சமீபகாலமாக முஸ்லிம் இளைஞர்களை தாக்கியும், வகுப்புவாத வன்முறைகளை தூண்டும்விதத்தில் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை கிழித்து ரோட்டில் வீசியுள்ளனர். டி.ஜி.பி தினேஷ் ரெட்டி இஸ்ரேலிய தூதரகத்தின் நிர்வாகி அலோன் உஸ்பிஜை சந்தித்து உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார். இது தேசத்துரோக செயலாகும். மேலும் நில மோசடி குற்றச்சாட்டுகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே மாநில அரசு இதனை கருத்தில் கொண்டு தினேஷ் ரெட்டியை உடனடியாக பதிவி நீக்கம் செய்யவேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 


இறுதியாக மாநில துணைத்தலைவர் அப்துல் வாரித் அவர்கள் உரை நிகழ்த்த இப்பொதுக்குழு நிறைவுபெற்றது.

Delegates in SGA
பொதுக்குழு உறுப்பினர்கள்