நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஹைதராபாத் காவல்துறை வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் 99% பேர் அப்பாவி முஸ்லிம்கள்


ஹைதராபாத் : ஹைதராபாத் நகரில் காவல் துறையால் வெளியிடப்பட்ட 900 பேர் கொண்ட ரவுடி பட்டியலில் 99% அப்பாவி முஸ்லிம்களே அடங்கியுள்ளனர் என்று காவல் துறையின் அணுகுமுறையை முன்னாள் ராஜ்யசபாவின் உறுப்பினர் பி.மது விமர்சித்துள்ளார்.
அட்டூழியங்களை கொண்டு செயல்படும் அதிகாரிகளை கொண்டு காவல்துறை செயல்பட்டு வருகிறது என்றும், இந்த பட்டியலை அரசாங்கம் மறு ஆய்வு செய்து அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களாக காவல்துறை வெளியிடும் ரவுடிகளின் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு செய்வதால் பல குடும்பங்களின் வாழ்க்கைக்கு பதில் கிடைக்கும். மேலும் அரசாங்கமோ, அரசியால்வாதிகளோ பழைய நகரத்தில் அமைதியை நிலைநிறுத்த விரும்பவில்லை என்றும், ரவுடி பட்டியல் கண் மூடித்தனமாக வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும்பான்மையானவர்கள் தினக் கூலி வேலை செய்பவர்களின்  பெயர்களே உள்ளது. மேலும் அவர்களை காவல் துறைக்கு தகவல் கொடுப்பவர்களாக மாற்ற பெரும் தொந்தரவு செய்கின்றனர். என்றார்.
வட்டி தொழில் செய்பவர்களையும், உண்மையான ரவுடிகளையும் துணையாக கொண்டு காவல்துறை ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சு வருகிறது என்றார்.
மக்கா மஸ்ஜித், லும்பினி பார்க் மற்றும் கோகுல் சந்த் பந்தர் குண்டுவெடிப்புகளில் கைதானவர்களை நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்தது, அதற்கு பின்னே அரசாங்கம் மன்னிப்பும் கேட்டது என்று அப்பாவிகள் மேல் வீண் பலிகள் திணிக்கப்படுவதை நினைவுக் கூறினார்.
இந்த 90௦ பேர் கொண்ட பட்டியலில் வெறும் இருப்பத்தைந்திற்கும் குறைவான ஹிந்து ரவுடிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன. எந்த காரணத்திற்காக 99% முஸ்லிம்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; ‘என் வாழ்வை முஸ்லிம்களின் சமூக வளர்ச்சிக்காகவும், கொடுமை புரியும் காவல் துறைக்கு எதிராக சண்டையிடவும் அர்பணிக்கப் போகிறேன். எனக்கு எந்த கட்சியை பற்றியும் கவலை இல்லை, ஏழை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கான என்னுடைய இந்த போராட்டம் தொடரும்’ என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.