நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

மோடிக்கு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கடும் கண்டனம்!


அஹ்மதாபாத் :  குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி மீது சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
modi
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கை வெளியாகியுள்ளது.

“India: A decade on, Gujarat Justice Incomplete, Victims of Anti-Muslim Violence Cite State Government Delays, Intimidation” என்ற தலைப்பில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கும் முக்கியமானவை:
குஜராத்தில் மோடி அரசு நீதியை நிலைகுலையச் செய்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது. கடமையை நிறைவேற்றுபவர்களை அச்சுறுத்துகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் கவனமாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இனப் படுகொலையை நடத்தியவர்களை விசாரணைச் செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்துள்ளது.
இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதில் தோல்வியை தழுவியுள்ளது. இவ்வாறு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் கூறியுள்ளது.