அஹ்மதாபாத் : ஆர்.எஸ்.எஸ்ஸும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்புவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், அன்னா ஹசாரே குழுவில் உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.
குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:
நிரபராதிகளை குறித்து வகுப்புவாத பிரச்சாரம் நடத்துவதும், அவர்களை பொய் வழக்குகளில் சிக்கவைப்பதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வழக்கமாகும். முஸ்லிம்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் நடத்துவதற்கும், பொய் வழக்குகளை பதிவுச் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் மனோநிலையை கொண்ட போலீஸ் இவர்களுக்கு உதவுகிறது. இதற்காக அவர்கள் தனி பாணியை கடைப்பிடிக்கின்றனர். ஊடகங்களோ, போலீஸ் மற்றும் அரசின் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றன. இவ்வாறு பிரசாந்த் பூஷன் கூறினார்.