நெல்லை :- பத்தமடையில் நேஷனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) சார்பில் பெண்களுக்கான மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 26/02/2011 (ஞாயிறு) அன்று நடைபெற்றது. இதற்கு நெல்லை மாவட்ட நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) தலைவர் சகோதரி. மும்தாஜ் ஆலிமா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாநில தலைவி சகோதரி. A. பாத்திமா ஆலிமா அவர்கள் உரை ஆற்றிய பொழுது |
நேஷனல் விமன்ஸ் பிரன்ட் ஏன் ? எதற்கு ? என்ற தலைப்பில் சகோதரி . அனீஸ் பாத்திமா அவர்கள் NWF இன் அவசியத்தையும், அது செய்து வரும் பணிகளையும் விளக்கினார்கள். பின்னர் "இஸ்லாத்தின் அடிப்படைகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய NWF இன் மாநில தலைவர் சகோதரி. A. பாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களான ஈமான் , கலிமா , தொழுகை , ஷிர்க், புறம் பேசுதல், வட்டி மற்றும் மறுமை வாழ்க்கை குறித்து எளிமையான நடையில் விளக்கினார்கள்.
பின்னர் "குடும்ப உறவுகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய NWF இன் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி. N. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்கள் இன்றைய காலத்தில் குடும்பங்களில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அதனை களைவதற்கு இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்ட இப்போதுகூட்டம் ஒரு மாநாடு போன்று திடல் முழுவதும் மக்கள் குழுமி மார்க்க விளக்கம் பெற்று சென்றனர்.