நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 1 மார்ச், 2012

பெண்களுக்கான தேசிய கமிஷனின் தலைவரின் அறிக்கை கண்டனத்திற்குறியது - நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்

பெண்ககள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டதால் தவறாக எடுத்துகொள்ள தேவையில்லை என்ற பெண்களுக்கான தேசிய கமிஷனின் தலைவரான மம்தா ஷர்மாவின் அறிக்கை பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செயலகம் குற்றம் சாட்டியுள்ளது. 
தேசிய‌ அளவில் உயர்ந்த பதவியில் இருப்பவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவேண்டியவராகவும் இருக்க வேண்டியவரிடமிருந்து பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்களுக்கு சாதகமாக அறிக்கை வந்துள்ளது.
பெண்கள்  ஒரு சுய கவுரவத்துடனும் கண்ணியத்திற்குரிய மனநிலையுடன் வாழவேண்டியவள். இதை சிதைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்வகையில் மம்தா ஷர்மா போன்றவர்கள் பெண்ணிணத்திற்கே ஒரு சாபக்கேடு தான் என்று நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கருத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வரவேற்கிறது.

நேஷனல் விமஸ் ஃப்ரண்டின் செயலக கூட்டம் தலைவர் சகோதரி ஷாஹிதா தஸ்னீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லைலா ஷம்சுதீன், ஏ.எஸ். ஜைனபா, ஃபரீதா அஷ்ரஃப் ஆகியோர் உரையாற்றினார்கள்.