நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

பிசுபிசுத்துப்போன பா.ஜ.கவின் வாக்குறுதிகள்


வழக்கம் போல் ஒவ்வொரு தேர்தலின் போதும் பா.ஜ.க விடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இந்த முறையும் உத்திர பிரதேச தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.


உத்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவதே பா.ஜ.கவின் லட்சியம் என்று கூறியது. ஆனால் இந்த முறை பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைகள் இந்துக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் அவர்கள் பா.ஜ.கவை ஆதரிக்க தயாரக இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்கு காரணம் இன்று வாக்களிப்பவர்களில் 60% இளைஞர்களாக இருக்கின்றார்கள். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிலேயே ஆர்வம் காட்டும் அவர்கள் இது போன்று மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை என டாக்டர் முஹம்மது ஆரிஃப் தெரிவித்தார்.

இந்துக்களின் வாக்குகளை ஒருமைப்படுத்த பா.ஜ.க தவறிவிட்டது என்பதே உண்மை. அதனுடைய உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. இதனால் வரை பல தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. மக்கள் தங்கள் பிழைப்பு விஷயத்தில் தான் ஆர்வம் காட்டுகின்றனர் என அவர் மேலும் கூறினார்.

அதிலும் குறிப்பாக‌ இராமர் கோயில் கட்டும் விவகாரத்திலும், மதம் சார்ந்த வாக்குறுதிகளிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடைய சிந்தனைகள் அனைத்தும் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றையே நாடுகின்றன. இதனாலேயே பா.ஜ.கவின் செல்வாக்கு நாடுமுழுவதும் சரிந்து வருகிறது. இதற்கு இடைப்பட்ட வேளையில் அவர்கள் ஆளும் பிற மாநிலங்களில் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், பாலியல் குற்றச்சாட்டுகளால் அவர்களின் செல்வாக்கு சரிந்து கொண்டே போகிறது.

வாரணாசி விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். வாக்களிக்கச்செல்பவர்களிடம்  பெரும்பாலும் இனவாதம் என்ற ஒரு மன நிலை இல்லை. ஆனால் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற ஒரே சிந்தனையிலேயெ அவர்கள் வாக்களிக்கச் செல்கின்றனர். சரியான சாலை வசதிகள் இல்லை, மின்சார பிரச்சனை, விலைவாசி உயர்வு, வணிகத்தில் நஷ்டம் இவை அனைத்தும் தான் அவர்கள் முன் இருக்கும் சவாலாக கருதுகிறார்கள்.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் அயோத்தியா, காசி, மதுரா என தங்களது மத துவேஷத்தை வெளிப்படுத்தி வருகிறது பாஜக. காசி என்பது வாரணாசியிலுள்ளது. இங்கு உத்திர பிரதேச மக்களுக்கு அது அவசியமில்லாத ஒன்றாக கருதுகிறார்கள். எ0��ட்டு வரும் பா.ஜ.க சிறுபான்மை மக்களுக்காக கொடுக்கப்படவரகூறினார்.

உத்திர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க சிறுபான்மை மக்களுக்காக கொடுக்கப்படவிருக்கும் 4.5% இடஒதுக்கீடு தொடர்பாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே இத்தகைய செயல்களை பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது. "இந்துக்களே! விழித்துக்கொள்ளுங்கள்" என்ற கோஷத்தை முன்வைத்து மததுவேஷத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யானாத் என்பவர் இனவாத்தை தூண்டும்விதமாக  பேசி வருகிறார். முஸ்லிம்களிடத்திலிருந்து வாக்குறிமையை பரிக்க வேண்டுமென்றும், முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களை அபகரிக்க வேண்டும் என பேசியுள்ளார். இது போன்ற பேச்சுக்களும் பிரச்சாரங்களும் பாமர மக்களிடத்தில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவர்கள் மீதே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்பொழுது பா.ஜ.கவின் செல்வாக்கு சரிந்துவருவதையே காட்டுகிறது.

யார் ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் முஸ்லிம்கள் எதிர்பார்பது உரிமை, நீதி, கல்வி, வேலைவாய்ப்பு என்பது மட்டுமே.