நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 16 பிப்ரவரி, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கிறதாம்!

சென்னை :  1 6.02.2012 அன்று காலை "டைம்ஸ் நவ்" ஆங்கில செய்தி சேனலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய பயங்கரமான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறதாம்! பயிற்ச்சி என்னவென்றால்? காவல்துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் கேள்வி கேட்டால் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பயிற்ச்சி அளிப்பதாக டைம்ஸ் நவ் சேனலில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்பு என்றும், தீவிரவாத அமைப்பு என்றும் உளவுத்துறையினரால் தீவிரமாக கண்காணித்து வரப்படுகின்ற இயக்கம் என்று வழக்கம் போல் அறைத்த மாவையே அறைத்தது. அது சரி! உளவுத்துறை அதிகாரிகள் அதே மாவை கொடுத்து அறையுங்கள் என்று  கூறும்போது இந்த ஊடகங்களை குற்றம் சுமத்தி என்ன பிரயோஜனம்?


சரி! விஷயத்திற்கு வருவோம்! உளவுத்துறை அதிகாரிகளோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ விசாரணை செய்தால் அவர்களிடம் எவ்வாறு பதில் அளிப்பது என்று பாப்புலர் ஃப்ரண்ட் தனது உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறதாம். எப்படிப்பட்ட பயிற்ச்சி என்று டைம்ஸ் நவ் பத்திரிக்கைத்தான் கூற வேண்டும். வழக்கம் போல் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளையும், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றின் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு பாமர மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவற்றான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவே இது போன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது.

இன்று எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறையினரால் பொய்வழக்கு புணையப்பட்டு சிறைச்சாலையில் இருக்கின்றனர். அப்படி இருக்க ஒரு காவல்துறை அதிகாரியோ, உளவுத்துறை அதிகாரியோ விசாரணைக்கு அழைத்தால் அவர்களிடம் எவ்வாறு பதில் கொடுப்பது என்பது பற்றிய சட்ட விழிப்புணர்வை மக்கள் மத்தியிலும் அதன் உறுப்பினர்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்பதை டைம்ஸ் நவ் தெரிவிக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் கேட்கு மூன்று கேள்விகள் இதோ!



1. If there is no violation of the law then why is PFI training its cadres for questioning?

2. Does PFI have any reason to believe that its cadre will be picked up by law enforcement and security agencies?

3. Is there any legitimate basis for such an apprehension? 

1. பாப்புலர் ஃப்ரண்ட் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இயக்கம் இல்லையென்றால் எதற்காக தன்னுடைய உறுப்பினர்களுக்கு உளவுத்துறை அதிகாரிகளிடம் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என பயிற்ச்சி அளிக்கிறது?

2. தன்னுடைய உறுப்பினர்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்கள் என்று எண்ணுகிறதா?

3. இப்பேற்பட்ட அச்சம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு இருக்கிறதா?

சட்டவிழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது குற்றம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

இன்று பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் என்று அல்ல, எத்தனையோ அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனரே. குற்றம் செய்யாமலேயே 14 வருடங்கள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த முஸ்லிம் இளைஞன் இதற்கு ஓர் உதாரணம்.


பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள். நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக போராடும்போது பொய்வழக்குகள் அவர்கள் மீது புனையப்படும் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அப்பாவி மக்களை காவல்துறையிலும், உளவுத்துறையிலும் இருக்கும் சில கருப்பு நரிகள் பொய் வழக்கு போட்டு வேட்டையாடுவதுதான் கவலையே!