புதுடெல்லி : 2008-ஆம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் முன்னாள் கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் ஏ.கே.ஜெயினை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.
முதல் முதலாக ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை பிடிப்பதற்கு பரிசுத் தொகையை சி.பி.ஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போலி என்கவுண்டர் படுகொலை வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர்களான ராஜேஷ் சவுதரி, சுல்ஃபிகார், துணை சப்-இன்ஸ்பெக்டரான அரவிந்த் ஆகியோரை குறித்து தகவல் அளித்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி என்கவுண்டர் படுகொலை தொடர்பாக 16 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.