நெல்லை மேற்கு
மாவட்டம் தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பாக "பள்ளி செல்வோம்"
(SCHOOL CHALO) "தேசீய விழிபுணர்வு பிரச்சாரத்தின் நிகழ்ச்சியாக 1,00,000
லட்சம் கல்வி
உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் 07 அன்று மாலை 4.30 மணிக்கு தென்காசி, காட்டு பாவா நடுநிலை பள்ளியில் வைத்து
பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா-வின் தென்காசி நகர தலைவர் P.
முகம்மது தாரிக் அவர்கள் தலைமையில் கல்வி உபகரணங்கள்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி திவான் ஒலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் முகம்மது உசேன்
M .A MEd பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமூக மேம்பாட்டுத்துறையின் மாவட்ட பொறுப்பாளர் S.M நாகூர் மீரான் அவர்கள். நடைபெற்று வரும் சமூக மேம்பாட்டு பணிகள்
குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் நெல்லை மேற்கு மாவட்ட
தலைவர் D.செய்யது இப்ராஹிம் உஸ்மானி அவர்கள். தென்காசி தொடக்க பள்ளி கல்வி கூடுதல்உதவி
அலுவலர் A.A.E.O திருமதி B. மேரி ஹெப்ஷிபா சொரூபராணி M .A
Med அவர்கள் SDPI நெல்லை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் A.முகம்மது ஹசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு
வாழ்த்துரையுடன் கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள். திவான் ஒலி அவர்கள் அவர்கள் நன்றியுடன் நிகழ்ச்சி நிறையுற்றது.
இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் பெற்றோர்கள்
மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
.