டெல்லி குடியரசுத் தலைவராக ஒரு முஸ்லிம் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய கட்சியின் நிலை என்று கூறிய சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான கமால் பரூக்கி கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலை மத அடிப்படையில் அணுகக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரைஷி ஆகிய மூவரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்றார். இந்த மூவரும் திறமைசாலிகள், அவரவர் துறைகளில் முத்திரை பதித்தவர்கள் என்று பாராட்டினார்.
2002-ல் அப்துல் கலாமைத் தங்கள் கட்சி ஆதரித்தபோதும், காங்கிரஸ் கட்சிக்கு அவர் என்றாலே இப்போதும் ஏதோ தயக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். வெகு விரைவிலேயே எங்களுடைய கட்சியின் நிலை அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் பரூக்கி.