நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 செப்டம்பர், 2011

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் வெளிநாட்டை சேர்ந்த வலது சாரி நிறுவனம் -சி.பி.ஐ

புதுடெல்லி: 1992-ல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்புக்கான பணம் அனைத்தையும்  வெளிநாட்டைச் சேர்ந்த வலதுசாரி நிறுவனம்

 வழங்கியிருப்பதாக ஒரு புதிய அறிக்கையை சிறப்பு புலானாய்வுக் குழு(சி.பி.ஐ) கண்டறிந்ததோடு, இந்த பணம் ஹவாலா ஊடகம் வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் அதிக அளவில் பணம் புலங்கப்பட்டு இருப்பதாகவும் சிறப்பு புலானாய்வு குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை ‘பாபர் மசூதி அழிவுக்குப் பின்னால் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள்’ என்ற பெயரில் இந்த மாதம் உள்துறை அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னால் பத்துக்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லிபரான் கமிஷனின் அறிக்கையை உள்துறை அமைச்சகம் சிறப்பு புலானாய்வு குழுவிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையை முன் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவின் டி.ஐ.ஜி. நீர்ஜா கோத்ரு, அமலாக்க இயக்குனர்கள் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதுணையுடன் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பற்றி விசாராணை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.