நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

முதல் விமானம் அக்.17ல் இயக்கம் தமிழகத்தில் இருந்து 3,818 பேர் ஹஜ் பயணம்


சென்னை : எழும்பூரில் நேற்று ‘ஹஜ் 2011’ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமது ஜான் தலைமை தாங்கினார். அரசு செயாளர் சந்தானம், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அமைச்சர் முகமது ஜான் பேசியதாவது: இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் 1.25 லட்சம் பேர் மேற்கொள்ள உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர் மனு செய்திருந்தனர். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 3057 ஆகும்.


இந்த இடத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பயனாய் கூடுதலாக 761 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இருந்து 3818 பேர் புனித பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில், பெண்கள் 1893 பேர் அடங்குவர்.

இது தவிர புதுச்சேரியில் இருந்து 59 பேரும், அந்தமானை சேர்ந்த 29 பேரும் சேர்த்து சென்னையில் இருந்து 4088 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புனித பயணிகள் ஜெட்டா செல்வதற்கு 14 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முதல் விமானம் அக்டோபர் 17ம் தேதி புறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து விமானங்களும் அக்டோபர் 31ம் தேதிக்குள் இயக்கப்படும் என்றார்.