நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 செப்டம்பர், 2011

9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு

நியூயார்க்: ஐ.நா பொது சபையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஈரான் அதிபர் முஹம்மத் அஹமத் நஜாத் ஆவேசமாக பேசினார்.
ஒசாமா பின்லாடனை கொன்று, அவர் உடலை கடலில் எறிந்த செயலை

 கடுமையாக விமர்சித்த அவர், அது செப்-11  தாக்குதல் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை மூடி மறைப்பதற்க்காகத்தான் செய்யபட்டது என்றும் கூறினார்.

இஸ்ரேலை கடுமையாக விமர்சித்த அவர் அதன் கொடூரமான தாக்குதல்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார். இதனை எதிர்த்து அமெரிக்க மற்றும் ஐரோப்பா யூனியனின் தூதர்கள் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் ஐநா சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா சபையின் பேச்சிற்கு பின்பு அவர் அசோசியேட் பிரஸிற்கு அளித்த பேட்டியில், “அமரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்ந்தது வெறும் ஒரு விமான தாக்குதலால் மட்டுமல்ல, ஒரு பொறியாளர் என்ற நிலையில் எனக்கு அதை நம்ப முடியாது, அது அமெரிக்கா தீட்டிய ஒரு சுய சூழ்ச்சியால்தான் அது தகர்க்கபட்டது” என்றும் கூறினார்.

மேலும் அவர் “முன்பு திட்டம் தீட்டிய  சூழ்ச்சியின் அடிப்படையில், இரட்டை கோபுரங்கள் உள்ளிருந்து குண்டு வைத்து தர்கப்பட்ட்டது” என்றும் அவர் விவரித்தார்.

“அதன் முக்கிய சூத்திரக்காரர் என்று குற்றம் சாற்றப்பட்ட ஒரு நபரை உயிருடன் பிடித்து சட்டத்திற்கு முன்பு கொண்டு வந்து, அதன் மூலம் அச்சதி செயலில் ஈடுபட்ட மீதமுள்ள நபர்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கவேண்டும், அதுவல்லவா சிறந்தது, அதை விடுத்து அவரை கொன்று நடுக்கடலில் வீசுவதா?” என்றும் அவர் அமெரிக்காவை கடுமையாக விமசித்து கேள்வி எழுப்பினார்.