அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72 மணிநேர உண்ணா விரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்டுள்ளதை பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருகின்றன.
அண்ணா ஹசாரேவை அம்போவென்று விட்டு விட்டு மோடி பக்கம் பல்டி அடித்து விட்டன பார்ப்பனப் பத்திரிகைகள்.
குஜராத் அமைதி இழந்து சமூக நல்லிணக்கம் கெடுவதற்கு வேறு யாராவது காரணமாக அமைந்து அதற்காக மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உலகம் இவ ரது உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும்.
காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் ? வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?
இந்த லட்சனத்தில் இது மதநல்லிணக்கத்திற்கு உலகுக்கே எடுத்துக்காட்டாம் ??? உலறுகிறது தினமலர்.
மதவெறியை தூண்டி மத நல்லிணக்கத்தை எவ்வாறு சீர் குலைப்பது என்பதை குஜராத்தில் நிகழ்த்தி உலக சியோனிஸ்டுகளுக்கு க்ளாஷ் நடத்தியதை அவ்வளவு எளிதில் உலகம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டது தினமலர்.
நான் மட்டும் முதல்வராக இல்லை என்றால் நானே முஸ்லீம்களின் மீது குண்டுகளை வீசி கொன்றொழித்திருப்பேன் முதல்வர் பதவி என்னைத் தடுக்கிறது என்றுக் கூறி சங்பரிவார குண்டர்களுக்கு கொலைவெறி ஊட்டியதையயும், குஜராத்தின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ரகசிய அமர்வுக்கு ஏற்பாடு செய்து அதில் இரண்டு நாட்கள் சங்பரிவார குண்டர்களின் அட்டூழியத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் மூன்றாவது நாள் என் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்டுப்படுத்தி விடுங்கள் என்றுக் கூறியதை தெஹல்கா மோடியின் ஒரிஜினல் நரபலி முகத்தை தோலுரித்து உலகுக்குக் காட்டியதை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டது தினமலர்.
பத்தாயிரம் அல்ல பத்து லட்சமும் அல்ல பத்து கோடி முஸ்லீம்களை திரட்டி பிரம்மாண்டமான சமூக நல்லிணக்க மாநாட்டை மோடி நடத்தினாலும் 2002ல் முஸ்லீம் பெண்களின் மீதான கற்பழிப்புகள் மற்றும் படுகொலைகளினால் மோடியின் மீது விழுந்த கொலை வெறியன் என்ற கரும் புள்ளி கரையவே கரையாது. குறைந்த பட்சம் நரேந்திர மோடி என்றப் பெயர் நரபலி மோடி என்ற மாறியதுக் கூட திரும்பி நரேந்திர மோடியாக மாறுவது கஸ்டம்.
காக்கை எத்தனை தான் விழுந்து விழுந்து குளித்தாலும் கொக்காக மாற முடியாது என்பதை மோடியும், மோடியை ஆஹா, ஓஹோ வென்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பன பத்திரிகைகளும் விளங்கி கொள்ளட்டும்.
இந்தியாவின் மதசார்பின்மையை குழி தோண்டிப் புதைத்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுணியச் செய்த கயவர்கள் ஒன்று விடாமல் துடைத்தெறியப்படாத வரை இந்தியாவில் அமைதி, ஒற்றுமை, மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஒருக்காலும் நிலை நாட்டவே முடியாது.
முஸ்லீம்களின் பங்கு
குஜராத்தின் ஐந்து மண்டலங்களிலிருந்து தலா இரண்டாயிரம் முஸ்லீம்களை கொண்டு வந்து சேர்ப்பதை குஜராத் சிறுபான்மை அமைப்புத் தலைவர் தன்வீர் சேட்டிடம் பொறுப்பை ஒப்படைத்து கவனிக்க வேண்டிய முறையில் அவரை கவனித்ததால் அவர் முஸ்லீம்களிடம் சென்று 2002 நிகழ்வுகளை நினைவுபடுத்தி வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்பதுவே நிதர்சனமான உண்மை.
காரணம் 2002 முஸ்லீம்களின் படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட அதிக வாக்குகுள் முஸ்லீம் தொகுதிகளில் கிடைத்ததாக தகவல் அப்பொழுதே வெளியாகின அந்த ஓட்டுகள் விழுந்தவைகள் அல்ல விழ வைத்தவைகள் என்பது உலகுக்கேத் தெரியும் இதிலிருந்தே மேல்படி நாடக அரங்கில் கலந்து கொண்ட முஸ்லீம் ஆண், பெண்கள் அனைவரும் தாமாக பங்கேற்க வில்லை, பங்கேற்க வைத்துள்ளனர்.
விரும்பினால் வரலாம் என்று மட்டும் கூறி இருந்தால் தன்வீர் சேட் கூட நாடக மேடையில் கலந்திருக்க மாட்டார்.
அனைவருக்கும் நீதி ?
எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என நாகூசாமல் புளுகி உள்ளார் நாடக அரங்கில் மோடி.
2002 கலவரத்திற்கு முன்பும், பின்பும் முஸ்லீம்கள் குஜராத் அரசு அதிகாரத்தில் எத்தனை பேர் அமரத்தப்பட்டுள்ளனர் ? குஜராத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் பிரபல கம்பெனிகளில் எத்தளை முஸ்லீம்கள் உயர் பெறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர் ?
2002ன் கலவரத்தில் வீடு வாசல்களை இழந்து அனாதை ஆஸ்ரமங்கிளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வருடங்கள் அனாதைகளாய் கிடந்து அல்லல் பட்ட முஸ்லீம்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்தார் என்றப் புள்ளி விபரங்களை வாசித்துக் காட்டி விட்டு மேற்காணும் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். என்றுக் கூறி இருந்தால் திருந்தி இருக்கிறார் என்று நம்பலாம் ?
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை உலக சாதனையைப் போல் எழுதி வருவதைக் கண்ட மோடி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன் பெயரும் அடிப்பட்டு வருவதை அறிந்து ஓட்டுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களிடம் வாலாட்டிக் கொண்டு வரவிருக்கிறார். அது தான் இந்த உண்ணாவிரத நாடகம் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
நரபலி மோடியின் நாடக மேடை கூடுதல் கலை கட்டுவதற்காக தமிழகத்திலிருந்தும் ஜெயலலிதா தனது பிரதிநிதிகைளை அனுப்பி உள்ளார்.
அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.2:10
''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது ''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11
கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.2:12