மும்பை : மகாராஷ்டிரா முழுவதும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தேசிய அடையாள அட்டைக்கு பெயர்களை பதிவு செய்து கொள்ள மாநில அரசு அனுமதித்துள்ளது. தேசிய அடையாள அட்டைக்கு பொதுமக்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள ஏற்கனவே இருக்கும் சென்டர்களில் பல மணி நேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.
இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பெயர்களை பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இதற்கு கடந்த மாதம் திடீரென தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தேசிய அடையாள அட்டைக்கு பதிவு செய்து கொள்ள மாநில தகவல் தொழிற்நுட்பத்துறை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இதன் மூலம் பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., கனரா வங்கிகளில் இந்த சென்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரம் தபால் நிலையங்களிலிலும் இந்த சென்டர்கள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் அல்லது ஒரு நகரில் இரண்டு அல்லது மூன்று தபால் நிலையங்களில் இந்த பதிவு சென்டர்கள் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தபால் நிலையங்களில் இந்த பதிவு சென்டர்கள் செயல்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பெற்றுகொள்ள முடியும். இதன் மூலம் மக்கள் எளிதில் தேசிய அடையாள அட்டைக்கு தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தற்போது செயல்பட்டு வரும் சென்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.