அபுதாபி : தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள். அபுதாபி கோடீஸ்வரர் ஒருவர் தன் பெயரை தன் சொந்த தீவில் 3 கி.மீ. தூரத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்.
ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் ஹமத் பின் ஹம்டன் அல் நஹ்யான். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார். இவற்றை பார்க் செய்வதற்காகவே அபுதாபிக்கு அருகில் ஒரு பிரமிடு வடிவ அரங்கு கட்டி அசத்தியவர்.
சரக்குகள் ஏற்றிச் செல்லக்கூடிய ‘டாட்ஜ் பவர் வேகன்’ வாகனம் போல மேலும் பல மடங்கு பெரிய டிரக் உருவாக்க வேண்டும் என்று இவருக்கு ஆசை. அதற்காக 50 டன் எடையில் 4 பெட்ரூம்களுடன் 8 மடங்கு பெரிதான டாட்ஜ் பவர் வேகன் வாகனத்தை உருவாக்கினார்.
சமீபத்தில் இவர் படைத்திருக்கும் சாதனை, உலகையே அசர வைத்திருக்கிறது. அபுதாபிக்கு அருகில் உள்ள ஃபுடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார். அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக ‘ஹமத்’ என்று முக்கால் கி.மீ. உயரம், 3 கி.மீ. நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரமாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார். பிரமாண்ட வாய்க்கால் மூலமாக கடல் நீர் செல்லும் வழித்தடம் ‘ஹமத்’ என்று தெரிகிறது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில்கூட அவரது பெயர் தெரிகிறது. தனது பெயர் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே ஹமத் இவ்வாறு செய்துள்ளார். மற்றபடி, அங்கு பள்ளம் வெட்டுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.