கடையநல்லூர் :- கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 12 ஒன்றிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களின் வேட்பு மனுக்களைப் பெற தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்க்கண்ட அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய வார்டுகள்:÷ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான தேர்தல் அலுவலராக உதவித்திட்ட அலுவலர் சுகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு 1 முதல் 6 வரை உதவி தேர்தல் அலுவலர் ஜெகந்நாதனிடமும், 7 முதல் 12 வரையுள்ள வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர் அசன்முகைதீன்மஸ்தானிடமும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம்.
மாவட்ட ஊராட்சி:÷மாவட்ட ஊராட்சி வார்டுக்கு போட்டியிட விரும்புபவர்கள்,உதவித் தேர்தல் அலுவலர் குணசேகரனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள்:÷ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான தேர்தல் அலுவலராக வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி நியமிக்கப்பட்டுள்ளார்.÷ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கீழ்க்கண்ட உதவித் தேர்தல் அலுவலர்களிடம் மனுத் தாக்கல் செய்யலாம்.
புன்னையாபுரம்,போகநல்லூர்,சொக்கம்பட்டி,திரிகூடபுரம்,புதுக்குடி ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் உதவித் தேர்தல் அலுவலர் சங்கரசுப்பிரமணியனிடமும், கம்பனேரி,காசிதர்மம்,நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாரகரம் ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் உதவித் தேர்தல் அலுவலர் ஜனார்த்தனிடமும், இடைகால்,ஊர்மேனியழகியான்,வேலாயுதபுரம்,பொய்கை,குலையனேரி,ஆனைகுளம் ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் உதவித் தேர்தல் அலுவலர் மங்கையர்க்கரசியிடமும் மனுத்தாக்கல் செய்யலாம்.