நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

10 மாநகராட்சி, 148 நகராட்சி, 13,593 ஊராட்சிகளுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிப்பு


சென்னை : தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இரு கட்டமாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் 561 டவுன் பஞ்சாயத்துகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என 13,593 ஊராட்சிகள்  உள்ளன.



உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மாலை நடந்தது. தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிசோ நாயகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாக கமிஷனர் சந்திரகாந்த் பி.காம்ளே, பேரூராட்சிகளின் இயக்குனர் எம்.சந்திரசேகரன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய கூட்டம் 5 மணி வரை நடந்தது.

கூட்டத்துக்குப்பின், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், “ கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி முடிவாகியுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை வெளியிடுவார்“ என்றார். இது குறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாநகராட்சியுடன் திருவெரும்பூர் பகுதியை இணைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், திருவெரும்பூர் பகுதியைச் சேர்க்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பின் இரு தரப்பு வாதங்களும் முடிந்துள்ளன. இந்த வழக்கில் இன்று காலையில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலையில் நீதிமன்றத்தில் எப்படி தீர்ப்பு வழங்கினாலும், அதற்கு ஏற்றார்போல தேர்தலை நடத்த ஆணையம் தயாராக உள்ளது. ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போனால், திருச்சி, திருவெரும்பூர் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் தேர்தல் அறிவிப்புகளை இன்று வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதில், முதல் கட்டமாக ஊராட்சி வார்டுகள், தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2வது கட்டமாக நகராட்சி, மாநகராட்சிகளில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 15ம் தேதி முதல் கட்டமாகவும், 20ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறலாம். அதன்பின், ஓட்டுப்பதிவு நடைபெறும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.