நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 2 மார்ச், 2011

காய்கள் - அவரைக்காய்


            யற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான்.  அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான்.  அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான்.    தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள்


ஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்

கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* -INA கேப்டன் ஷா

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23-01-2011 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் பின் வருமாறு: 

செவ்வாய், 4 ஜனவரி, 2011

மதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!

துரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் - ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத  ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

மாநில நிர்வாகிகள்


புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மா நில தலைவர் ஏ.ஸ்.இஸ்மாயில் உரையாற்றுகிறார். தேசிய தலைவர் ஈ.எம். அப்துர்ரஹ்மானுடன் தேர்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள்




இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இயக்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில பொதுக்குழு ஒன்று கூடி மாநில செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டியில் உள்ள‌ அறிவகத்தில் வைத்து நடைப்பெற்றது. இத்தேர்தலை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப் அவர்கள் நடத்தி தந்தார்கள். அதனடிப்படையில் வருகின்ற இரண்டு வருடத்திற்கான நிர்வாகிகள் கீழ் கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


 
A.S. இஸ்மாயில்                              - தலைவர் (கோவை)
M. முஹம்மது இஸ்மாயில்         - துணைத்தலைவர் (நெல்லை)
A. ஹாலித் முஹம்மது                 - பொதுச்செயலாளர் (மதுரை)

முஹம்மது ஷேக் அன்சாரி         - செயலாளர் (சென்னை)
ஆரிஃப் ஃபைசல்                              - செயலாளர் (நாகர்கோவில்)
K.S.M. இபுராஹிம் @ அஸ்கர்      - பொருளாளர் (சென்னை)


மாநில செயற்குழு உறுப்பினர்கள்

1. ஏ. அகமது ஃபக்ருதீன்
2. வழக்கறிஞர் முஹம்மது ஷாஜஹான்
3. வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப்
4. எஸ்.பி. நஸ்ருதீன்
5. ஏ. செய்யது இபுராஹிம் உஸ்மானி 

6. M. நிஜாம் முஹைதீன்