இலவச நோட்டு புத்தகம் விநியோகம்
உடுப்பி: மாணவர்களில் கல்விதரத்தை மேம்படுத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பல்வேறு சமுதாய நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக இலவச நோட்டு புத்தகம் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மௌலானா பைசுல்லா அவர்கள் துவாவுடன் தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் பேசிய பாப்புலர் பிராண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிஸ் அஹ்மத் , நாட்டு மக்கள் அனைவரும் கல்வியில் மேம்படவேண்டும் மக்களிடையே கல்வி உட்பட எந்தவகையிலும் உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என பாப்புலர் ப்ரண்ட் விரும்புகிறது நாட்டு மக்களிடையே ஒற்றுமை ஏற்படவும் கல்வியில் அனைவரும் சமத்துவம் பெறவும் பாப்புலர் ப்ரண்ட் இது போன்ற நிகழ்சிகளை மூலை முடுக்கெல்லாம் நடத்தி அயராது பணியாற்றி வருகிறது என்றார்.
சிறப்பு விருந்தினரான பெல்லாபு கிராம பஞ்சாயத்தின் தலைவர் தேவி பிரசாத் அவர்கள் பாப்புலர் பிராண்டின் கல்விச் சேவையை வெகுவாக பாராட்டினார்.
சிறப்பு விருந்தினரான பெல்லாபு கிராம பஞ்சாயத்தின் தலைவர் தேவி பிரசாத் அவர்கள் பாப்புலர் பிராண்டின் கல்விச் சேவையை வெகுவாக பாராட்டினார்.
இப்ராகிம் பாகிர் , பத்ரிய்யா ஜாமியா மஸ்ஜித் தலைவர் , சைய்யது அஷ்ரப் , ரபிக் மஜூர் , உடுப்பி மாவட்ட பொது செயலாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . ஹனிப் முலூர் அவர்கள் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாட்டையும் கவனித்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்