நெல்லை மேற்கு மாவட்டம் அச்சனபுதூரில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின்
சார்பாக "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO)
"(தேசீய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா) நிகழ்ச்சி ஜூன் 18 அன்று மாலை 4.30 மணிக்கு அச்சனபுதூர், நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் மாவட்ட தலைவர் A. சிராஜீல் முனிர் அவர்கள், பள்ளிவாசல் இமாம் A. முகம்மது கனி உஸ்மானி
மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் மைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரையுடன் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள்.
இதில் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
..