நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 21 செப்டம்பர், 2011

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அக்டோபர் 17, 19ல் வாக்குப்பதிவு

சென்னை :- உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திருச்சி மாநகராட்சியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. அதே போல், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திருச்சி மாநகராட்சியுடன் திருவெரும்பூர் பகுதியை இணைத்து தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வெளியான பிறகு உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தேர்தல் தேதிகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அளித்த பேட்டி:உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு
இன்று மனு தாக்கல் ஆரம்பம்

தாக்கல் இன்று தொடங்குகிறது. அதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 29ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் 30ம் தேதி பரிசீலனை செய்யப்படும். அடுத்த மாதம் 3ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.
வாக்கு எண்ணிக்கை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்கு பதிவு அடுத்த மாதம் 17ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப் பதிவு 19ம் தேதியும் நடைபெறும். முதல் கட்ட வாக்குப்பதிவில் அனைத்து மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும். 2ம் கட்ட வாக்குப் பதிவில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் 22.09.2011
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் 29.09.2011
வேட்புமனுக்கள் பரிசீலனை 30.09.2011
மனுக்கள் வாபஸ்பெற கடைசி நாள் 03.10.2011
முதல்கட்ட வாக்குப்பதிவு 17.10.2011
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 19.10.2011
வாக்கு எண்ணிக்கை 21.10.2011
பதவி ஏற்பு 25.10.2011