நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 செப்டம்பர், 2011

ஒரிசாவில் கடும் வெள்ளம்: மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை

ஒரிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் பனிகோய்லி கிராமத்தைச் சூழ்ந்த வெள்ளத்தில் கால்நடைகளுடன் நடந்து செல்லும் கிராம மக்கள். நாள்: சனிக்கிழமை.
புதுதில்லி : ஒரிசா வெள்ளச் சேத மீட்பு பணிகளுக்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உள்ளது.
 ஒரிசாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல நகரங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
 
மாநிலத்தின் முக்கிய நதிகளான பூடாபலாங், ஸ்வர்ணரேகா, பிராமணி மற்றும் பத்ராணி ஆகியவற்றில் தண்ணீர் கரையை தாண்டி ஓடுவதால் சுற்றுப்புற ஜாஜ்பூர், பாத்ராக், கேந்திரபாரா, பாலேஸ்வர், மயூர்பஞ்ச்,கேனோஜார் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
 வெள்ள மீட்புப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம், சுமார் 155 வீரர்கள், 29 படகுகள், 60 உயிர்காக்கும் ராணுவத்தினர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை ஓன்றை ஓரிசாவுக்கு அனுப்பியுள்ளது.
 அதிக பாதிப்புக்குள்ளான ஜாஜ்பூர் மாவட்டத்தில் கூடுதல் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உணவின்றி வாடும் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன.
 அதிக பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் கூடுதலாக 150 ராணுவ வீரர்களை கொண்ட படை ஓன்றும் வரவழைக்கப் பட்டுள்ளது.
 மத்திய அரசும், மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து மாநில அதிகாரிகளை அவ்வப்போது தொடர்புகொண்டு கேட்டறிந்து உதவிகளை அளித்து வருகிறது.