நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 21 செப்டம்பர், 2011

கடையநல்லூர் தமிழை அறிந்து கொள்ளுங்கள்


கடையநல்லூர் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் தமிழ் மற்ற ஊர்களிலிருந்தும் மிகவும் வித்தியாசப்படும். நமதூரில் அனைத்து சமுதாய மக்களும் சகோதர பாசத்துடன் ஒன்றோடோன்று இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகள் வித்தியாசப்படும்.

இவ்வளவு ஏன் முஸ்லிம்களிடையே தெருவில் வசிக்கும் மக்களும், பேட்டையில் வசிக்கும் மக்களும் பயன்படுத்தும் வார்த்தைகள் சில இடங்களில் வேறுபடும்.

ஆகவே நமதுரின் தனித்தன்மையான வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கவே இந்த சிறு முயற்சி.


இந்த பகுதியில் உங்களுக்கு தெரிந்த வட்டார வழக்கில் உள்ள தமிழ் சொல்லையும் அதற்கு ஈடான தமிழ்ச் சொல்லையும் தெரியப்படுத்துங்கள்.மற்ற அனைவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.நன்றி.

வாப்பா(தெரு), அத்தா(பேட்டை) அப்பா, தந்தை
ம்மா, உம்மா அம்மா
நல்லாப்பா, ராதா தாத்தா(அப்பாவின் தந்தை)
நல்லம்மா, ராதி பாட்டி (அப்பாவின் தாய்)
பெதாட்டு வாப்பா, நன்னா தாத்தா(அம்மாவின் தந்தை)
பெதாட்டும்மா, நன்னி பாட்டி(அம்மாவின் தாய்)
சின்னாப்பா தந்தையின் இளைய சகோதரர்
சின்னம்மா, சின்னத்தா சிறிய தந்தையின் மனைவி
பெரியாப்பா, பெருத்தா தந்தையின் மூத்த சகோதரர், அம்மாவின் அக்கா கணவர்
பெரிம்மா அம்மாவின் அக்கா
தாத்தா அக்கா
மன்னி, மைனி அண்ணனின் மனைவி
மாப்ள தாயின் சகோதரனின் மகன், தந்தையின் சகோதரியின்
மச்சான் தாயின் சகோதரனின் மகன், தந்தையின் சகோதரியின் மகன் மற்றும் கொழுந்தனார்
மாமி தந்தையின் சகோதரி
பளையாசா பள்ளிவாசல்,வணக்கத்தலம்
கைலி லுங்கி
சோப்பு சட்டைப்பை
மச்சி வீட்டின் மாடிப்பகுதி
மேலோடு வீட்டின் மேற்குப்பகுதியில் இருக்கும் பக்கத்து வீடு
கீழோடு வீட்டின் கிழக்குப்பகுதியில் இருக்கும் பக்கத்து வீடு
ஆணம் குழம்பு
தொவையல் சட்னி
இன்னாங்கோ ஒருவரை அழைப்பது
சால்னா கறிக்குழம்பு
சாயா தேநீர்
தாலா நால்வர் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட உபயோகிக்கும் அகலமான பாத்திரம்
சேளா மீதி.