நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 செப்டம்பர், 2011

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு

நியூயார்க் : மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இஸ்ரேல் தான் என்று ஐ.நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.

இஸ்ரேல் -ஃபலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் அடாஅவடிப் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறினார்.

இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஃபலஸ்தீன் பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்கு மாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.

ஐ.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய எர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூட இஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாது என்றும் கூறினார்.