நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

விஷம் போல் ஏறும் காய்கறி விலை

விஷம் போல  ஏறிக்கொண்டிருக்கிறது காய்கறி விலைகள்;  வீட்டு சமையல் அறையில் தயாராகும் சாம்பார் ரசத்தையும் விலை ஏற்றம் பதம் பார்த்துள்ளது. 
தமிழகத்தில் ஒரு காலத்தில் நன்றாக இருந்த விவசாயம், இன்று முடங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம் விளைநிலங்கள் எல்லாம், வீட்டுமனைகளாகவும்,  தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன. 




மீதமுள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான ஆட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால், காய்கறிகளின்  உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. 
இதனால், தமிழகம் காய்கறிகளுக்காக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களை சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. அவர்களை நம்பியே இருக்க வேண் டிய நிலைமை உள்ளது. 
அந்த மாநிலங்களில் காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. அந்த நேரத்தில் காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்து  விடுகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன் ஒரு கிலோ வெங்காயம் ஸீ120க்கு விற்கப்பட்டதை மறக்க முடியுமா.
மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக சொல்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்குவேன் என்றும் கூறுகின்றனர்.  இது எழுத்துவடிவில் மட்டுமே உள்ளது. செயல்வடிவில் இல்லை. இதுவரை விவசாயத்தை மேம்படுத்த, முழுமையான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்தியாவி லேயே வளம் கொழிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால் என்ன பயன், காய்கறிகளுக்காக வெளிமாநிலங்களில் கை ஏந்தும் நிலைமையில் தான் இருக்கிறோம். 
வியாபாரிகள் கூறுகையில், ‘‘தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ  ஸீ1, ஸீ2க்கு விற்பனை செய்தோம். ஆனால், தற்போது ஸீ15, 20க்கு மேல் விற்பனை செய்கிறோம். காய்கறிகளின் உற்பத்தி அதிகமாக இருந்தால், விலை குறைவாக இ ருக்கும். உற்பத்தி குறைவாக இருந்தால், விலை அதிகமாக இருக்கும். விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. பருவ மழை, கோடை மழை சரியாக பெய்வதில்லை. அடிக்கடி பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து வருகிறது. இவையே, காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணம்’’ என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் 300 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இதில், 70 லாரிகளில் வெங்கா யமும், 60 லாரிகளில் தக்காளியும், 20 லாரிகளில் உருளைக்கிழங்கும் வருகின்றன. லாரி ஸ்டிரைக், மழை காலங்களில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருக்கும். அந்த  நேரங்களில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
காய்கறிகளை சேமித்து வைக்க கோயம்பேடு, எண்ணூர், தேனி, திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களில் குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. இந்த கிடங்குகள்  முறையாக செயல்படுவதில்லை. உற்பத்தி அதிகமாக இருக்கும் நேரங்களில், காய்கறிகளை சேமித்து வைக்க முடிவதில்லை. இதனால், காய்கறிகள் அழுகிவிடுகின்றன.  கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் காய்கறிகள் வீணாகின்றது. காய்கறிகள் வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் கூறு கையில், ‘‘மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. விவசாயத்தை விட்டுவிட்டு அனைவரும் வேலைக்கு சென்றனர். 


விவசாயத்திற்கு ஆட் கள் இல்லை. அப்படி ஆட்கள் கிடைத்தாலும், கூலி அதிகமாக கேட்கின்றனர். 
இதனால், விளைநிலங்கள் எல்லாம், தரிசு நிலங்களாக மாறியது. வீட்டுமனைகளாகவும், தொழிற் சாலைகளாகவும் உருவாகிறது. இதனால், கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், பாவூர் சத்திரம், திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட பல மார்கெட்க்களுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து விட்டது. 
உழவர் சந்தைகளும் சரியாக செயல்படவில்லை. ஒரு சில பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக  இருக்கிறது. அதிக அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்த திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டிவானம், விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இங் கெல்லாம், ரியல் எஸ்டெட் செய்பவர்கள் நிலத்தை வாங்கி, வீட்டுமனைகளாக போட்டு விற்று வருகின்றனர்.

காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க சிறு விவசாயிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்பட்டால், முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்.  மின்சாரம் தடையில்லாமல் கொடுக்க வேண்டும். உரம் போன்றவற்றின் விலைகளை குறைக்க வேண்டும். விளை நிலங்கள் எல்லாம், வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க  வேண்டும். காலி நிலங்களில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்றார்.
எப்படியோ ஏறிக்கொண்டிருக்கும் விலையை தடுத்து நிறுத்த அரசு என்ன தான் செய்யப்போகிறதோ?