நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 21 செப்டம்பர், 2011

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்


நாக்பூர் :  ரதயாத்திரை குறித்து ஆர்.எஸ்.எஸ். வுடன் கருத்துவேறுபாடு இல்லை எனவும், திட்டமிட்டபடி ரதயாத்திரை தொடங்கும் எனவும் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். 


பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ,82 , ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதற்காக நாக்பூர் சென்றுள்ள அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பாகவத்தை சந்தித்து பேசினார்.. முன்னதாக ஊழலுக்கு எதிராக யாத்திரை துவங்கப்போவதாக செப்.8-ம் தேதி அறிவித்திருந்தார். அத்வானியின் இந்த அறிவிப்பிற்கு ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி தெரிவித்திருந்தது. இது குறித்து விவாதிக்க பா.ஜ. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சந்தித்து பேசினார்.. விரைவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. 

இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் (அக்டோபர் 11-ம் தேதி) குஜராத் மாநிலத்தின் , சர்தார் பட்டேல் பிறந்த ஊரிலிருந்து யாத்திரை துவங்க அத்வானி அறிவித்திருக்கும் யாத்திரைக்கும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கும் குறைந்த நாட்களே உள்ளது. அதுமட்டுமின்றி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன மற்றும் பா.ஜ. தேசிய நிர்வாகக்குழுக்கூட்டமும் செப்.30 மற்றும் அக்.1-ம் தேதி நடக்கிறது. இவற்றை கவனத்தில் கொண்டு யாத்திரை ரத்து செய்வதா , வேண்டாமா என்பது குறித்தும் விவாதித்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள ‌பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரியையும் சந்தித்தார்.

குஜராத் மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் வேண்டி அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் தேசிய அளவில் பா.ஜ. செல்வாக்கு அதிகரித்துள்ளது. 
இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.கட்சியின் தலைமையகமான நாக்பூர் வந்திருந்த எல்.கே. அத்வானி, அக்கட்சியின் தலைவர் மோகன்பாகவத்தை சந்தித்து பேசினார்.

நாக்பூரில் நிருபர்களிடம் அத்வானி கூறியதாவது: தேசிய தலைவர் நிதின்கட்காரியின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன். ரதயாத்திரை குறி்த்து கேள்வி கேட்ட போது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார், வடக்கு, மற்றும் கிழக்கு மாநிலங்கள் உள்பட முக்கிய மாநிலங்கள் முழுவதும் இந்த ரதயாத்திரை மேற்கொள்வேன். நான் மேற்கொள்ள இருக்கும் யாத்திரை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன், பா.ஜ. கருத்துவேறுபாடு இ‌‌ல்‌லை. இவ்வாறு அத்வானி கூறினார்.