நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 19 செப்டம்பர், 2011

முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றும் மன்னிக்க இயலாது


லக்னோ : 2500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிர் இழந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழும் இடத்தை இழந்தும், இன்னும் முஸ்லிம் மக்கள் தங்கள் கிரமாங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், தங்கள் சொந்த கிராமத்திற்கும், தங்கள் சொந்த வீட்டிற்கும் வர இயலமால் மற்ற இடங்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 2002-ல் நடந்த குஜராத் சம்பவத்திற்கு காரணமான மோடியை முஸ்லிம் மக்கள் என்றும் மன்னிக்க இயலாது.
மோடி உண்ணாவிரதம் இருப்பதே அவர் ஏற்படுத்திய மதக் கலவரங்களையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் மறக்கவும், அவருக்கு நற்பெயரை உண்டாக்கவும் தான் என்றும் பல முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு அரசியல் வித்தை.
குஜராத் கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு, உலக அளவில் இந்தியாவின் நற்பெயரை கெடுத்தும், மனித உரிமை கமிஷன் பெரும் அளவில் செயல்பட்டும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும், மேலும் இந்த உண்ணாவிரதம் மதச்சார்பற்றது என்று அனைத்து சிறுபான்மை மக்களுக்கு தெரிவிக்கவும், அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்கவும், நற்பெயரை பெறவும் மோடியும் அவரது குழுவும் திட்டம் தீட்டி செயல்படுகிறது. ஆனால் இவர் என்ன செய்தாலும் எங்களை சமதானப்படுத்தவும், எங்களை நம்ப வைக்கவும் முடியாது என்று மசூதியில் வேலை பார்க்கும் கல்பி சாதிக் என்பவர் தெரிவித்துள்ளார்.
அவர் குஜராத்திற்கு மட்டும் தலைவர் அல்ல. ஒரு தேசிய தலைவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளவும், அவர் தன் மாநிலத்தை மேம்படுத்தியதாக சொல்வதை, அங்கு வசிப்பவர்கள் மட்டுமே சொல்ல இயலும், இதனால் அவர் செய்த குற்றச்சாட்டுகளை துடைத்தெறிய முடியாது என்று முஸ்லிம் தலைவர் முஹம்மத் ஜாவித் தெரிவித்துள்ளார்.
மேலும் கோத்ரா ரயில் விபத்தில் பல ஹிந்து யாத்ரீகளை கொன்றதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று தாக்குதல் நடத்தி பல கொடூரங்களை செய்த நரேந்திர மோடியை எத்தனை உண்ணாவிரதம் இருந்தாலும் முஸ்லிம் மக்கள் மன்னிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.