நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது.
 சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

புதன், 15 ஜனவரி, 2014

செல்போனின் முக்கிய எண்கள்

செல்போனின் முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய

உணவில்லை: யர்முக் முகாமில் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்!

டமஸ்கஸ்: உணவும், மருந்தும் கிடைக்காததால் சிரியாவில் உள்ள யர்முக் அகதிகள் முகாமில் கடந்த 2 வாரங்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 
Photo: யர்முக் முகாமில் உணவில்லாமல் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்!

உணவும், மருந்தும் கிடைக்காததால் சிரியாவில் உள்ள யர்முக் அகதிகள் முகாமில் கடந்த 2 வாரங்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு டமாஸ்கஸில் யர்முக் முகாம் அடங்கிய பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு சிரியா ராணுவம் முகாமிற்கு உணவை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

ஊட்டச்சத்துக் குறைவினால் 24 பேர் மரணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிட்சை கிடைக்காததால் மரணித்துள்ளனர். லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

யர்முக்கில் ஃபலஸ்தீன் மக்களுக்கான முகாமின் சூழல் மோசமாக உள்ளதாக ஃபலஸ்தீன் மக்களுக்கான ஐ.நா ஏஜன்சி எச்சரிக்கை விடுத்தபோதும் சிரியா அரசு புறக்கணித்து விட்டது.

முகாமிற்கு உணவும், குடிநீரும் செல்வதை சிரியா சர்வாதிகார அரசு தடுத்துள்ளது. போராளிகளுக்கு ஃபலஸ்தீன் மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பது சிரியா சர்வாதிகார அரசின் குற்றச்சாட்டாகும். அதேவேளையில் ஹும்ஸில் ராணுவத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமா, இத்லிப், ஹலப், தர்ஆ ஆகிய இடங்களில் மரணித்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு டமஸ்கஸில் யர்முக் முகாம் அடங்கிய பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு சிரியா ராணுவம் முகாமிற்கு உணவைக் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!!

ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு.
நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா.
சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

வளர்ச்சியின் பலன் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை – பிரதமர் ஒப்புதல்!

புதுடெல்லி: நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு வளர்ச்சியின் பலன் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.அனைத்து சிறுபான்மை மக்களையும் ஒரே பிரிவாக காணமுடியாது. சில பிரிவினர் மிகவும் முன்னேறியுள்ளனர். 
Ma
ஆனால், முஸ்லிம்களின் நிலைமாறுபட்டது என்று அவர் கூறினார். டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தின் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியா போன்ற பாரம்பரியம்மிக்க நாட்டில் மதச்சார்பற்ற தன்மையை வாழ்க்கையுடன் இணைத்து மக்கள் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இந்தியாவின் பலமாக கருதப்படுகிறது.

திங்கள், 13 ஜனவரி, 2014

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
நெல்லை மேற்கு மாவட்ட பொருப்பாளர் தென்காசி மீரான்
இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒரு கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க

சனி, 11 ஜனவரி, 2014

“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. 
சிறப்புரையாற்றும் SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி
அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.