டமஸ்கஸ்: உணவும், மருந்தும் கிடைக்காததால் சிரியாவில் உள்ள யர்முக் அகதிகள் முகாமில் கடந்த 2 வாரங்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு டமஸ்கஸில் யர்முக் முகாம் அடங்கிய பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு சிரியா ராணுவம் முகாமிற்கு உணவைக் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.
முகாமிற்கு உணவும், குடிநீரும் செல்வதை சிரியா சர்வாதிகார அரசு தடுத்துள்ளது. போராளிகளுக்கு ஃபலஸ்தீன மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பது சிரியா சர்வாதிகார அரசின் குற்றச்சாட்டாகும். அதேவேளையில் ஹும்ஸில் ராணுவத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமா, இத்லிப், ஹலப், தர்ஆ ஆகிய இடங்களில் மரணித்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.