ஆக்கம் : ஹாபீஸ் A . B . முஹம்மது . நிர்வாகி அல் பரகா வங்கி.
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,
இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .
அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,
நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும் , 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர் .
ஒவ்வொரு ஐந்து மனிதனுக்கும் ஒரு முஸ்லிம் ,
ஒரு ஹிந்துவுக்கு இரண்டு முஸ்லிம் ,
ஒரு புத்தனுக்கு இரண்டு முஸ்லிம் ,
ஒரு யூதருக்கு இரண்டு முஸ்லிம்
முஸ்லிம்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்ககூடிய நீங்கள் ஏன் யூதர்களை பார்த்து பயப்படுகிறீர்கள் ?
யூதர்களுக்கு சில உதாரணங்கள் :
அவர்கள் கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன ?
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் 500 பல்கலைகழகங்கள் உள்ளன . ஆனால்
அமெரிக்காவில் மட்டும் 5758 பல்கலைகழகங்கள் உள்ளன .
இந்தியாவில் மட்டும் 8407 பல்கலைகழகங்கள் உள்ளன .
உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள் ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
உலகில் 90 % கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர் .
முஸ்லிம்களின் கல்வியறிவு 40 % மட்டுமே .
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள் 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர் .
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை .
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98 % பூர்த்தி செய்துள்ளன .
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50 % பூர்த்தி செய்துள்ளன .
40 % கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர் .
ஆனால் முஸ்லிகள் 2 % பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர் .
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே
உள்ளனர் . ஆனால் அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் இருக்கிறார்கள் .
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள் கல்வியறிவை பெறுங்கள் உலகில் தலை சிறந்து விளங்குங்கள் .
இது உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும் தமிழக முஸ்லிம்களே நீங்களும்
விழிப்புணர்வுடன் இருங்கள் . இந்த பதிவின் முழுமையான ஆங்கில பதிவு இணைப்பில் உள்ளது .