நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 15 ஜூன், 2012

அரசு பணி நியமனத்தில் பாரபட்சம் வேண்டாம்!

கடந்த மார்ச் மாதத்தில் 1379 மருத்துவர்கல் 10(ஏ) (ஐ) என்ற டி.என்.பி.எஸ்.சி யின் சிறப்பு விதி மூலம் பொது சுகாதார துறையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 
தமிழகத்தில் அனைத்து அரசு தேர்ந்தெடுப்புகளிலும் முஸ்லிம்கள் சமூகத்திற்கு 3.5% தனி இடஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில் 1349 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட போது ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் இதே போன்ற தேர்வில் 2438 நபர்களில் 88 பேர் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.



தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5% இடஒதுக்கீட்டை உயர்த்த பரீசீலனை செய்யப்படும் என்று அறிவித்த அ.இ.அ.தி.மு.க அரசு நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை கூட அமுல்படுத்தாது முஸ்லிம் சமூகத்திற்கு அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் அனைத்து வளங்களும் அனைத்து சமூகத்திற்கும் விகிதாச்சார அடிப்படையில் வழங்கிட வேண்டும் என்ற சமூக நீதி கோட்பாடு புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. 10 (எ)(ஐ) போன்ற அவசர தேவைகளுக்காக உடனடியாக பணியில் புதிய நியமனங்களை செய்யும் அரசு அதில் இடஒதுக்கீட்டு கொள்கை முறையாக பின்பற்றப்படுகிறதா என்று உறுதி செய்ய வேண்டும். பதவி மூப்பு அடிப்படையில் பணியிடங்களை ஒதுக்கும் போதும், சாதாரணமாக பணியிடங்கள் நிரப்பப்படும் போதும் முறைகேடுகள் நடக்கின்றதா என்பதை கண்காணித்து பாரபட்சமில்லாமல் நேர்மையான முறையில் பணியிட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.