குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துயர் துடைப்பு பணிகளில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் தன்னார்வ தொண்டர்கள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை துயர் துடைப்பு படகுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிட்சை அளிப்பதிலும் ரிஹாப் தன்னார்வ தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வடக்கு பார்பேட்டா, தெற்கு பார்பேட்டா, காமரூப், குவஹாத்தி, நவ்காவண், கோல்பாரா ஆகிய ஆறு மாவட்டங்களில் தற்பொழுது ரிஹாப் துயர்துடைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களிலும் துயர்துடைப்பு பணிகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளதாக ரிஹாப் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் தெரிவித்தார்.