கடையநல்லூர் : கடையநல்லூரில்
காலராவுக்கு மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டு அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பரவிய
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலியானார்கள். நூற்றுக்கும்
மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த
வேலம்மாள்(62), மாரியம்மாள்(23), பவித்ரா(17), பாப்பா(55), ஆவுடைத்தாய்(28), கனி (33), செல்வி (48), வேலம்மாள் (55), குருசாமி (40), கனகாதேவி (10), வனிதா (5) சிவா(9), கவிதா (11), முத்தையா (55), புதுக்காவு (58) உட்பட 15 பேர் நேற்று திடீரென காலராவால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோல் தனியார் மருத்துவமனையிலும்
ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காலரா வேகமாக பரவுவதால் சுகாதார துறையினர் மற்றும் நகராட்சி
துறையினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி தடுப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பல மாதங்கள் கட்டுப்படாமல்
வாட்டி வதைத்தது போல் காலராவும் அச்சுறுத்தி வருவது பொதுமக்களை பீதி அடைய
செய்துள்ளது.
காலராவால் பாதிக்கப்பட்டவர்கள்
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.