நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 9 ஜூலை, 2012

இந்தியா நெக்ஸ்ட் புதிய ஹிந்தி மாதமிருமுறை வெளியீடு

"இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை 
 
ஜூன் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் அஞ்சும் நயீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் ," இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி என்ற போதிலும் அர்த்தமுள்ள நெறிமுறை சார்ந்த ஊடகத்தை நோக்கிய பயணத்தில் இது சீரிய முயற்சி" என்று கூறினார்.

பத்திரிக்கையின் முதல் பிரதிகளை முன்னாள் நீதியரசர் எ எம் அஹ்மதி அவர்கள் என் டி பன்சோலி அவர்களுக்கும பேராசிரியர் சாய் பாபா அவர்களுக்கும் வழங்கினார் .

டெல்லி பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் உட்பட, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த முன்முயற்சியை தங்களது சிறப்புரையில் வெகுவாக பாராட்டினர்