நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 9 ஜூலை, 2012

முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யகோரி சென்னையில் கண்டன பொதுகூட்டம்


சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களது எழுச்சி உரை..

இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்ப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரும் ஒற்றை கோரிக்கை தொடர் பொதுக்கூட்டம் “விடுதலையை நோக்கி” என்ற தலைப்பில் எழுச்சி கருத்தரங்கமாக சென்னை லயோலா கல்லூரி பி. எட். ஹாலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் குனங்குடி அனீபா, 
வழக்கறிஞர் பா.புகழேந்தி,இந்திய தேசிய லீக்கின் பொதுச்செயலாளர் தடா ரஹீம்,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவர் முகமது முனீர் மேலும் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை  இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்  ஒருங்கிணைப்பாளர் சே. ஜே. உமர்கயான் அவர்கள்ஒருங்கிணைந்து நடத்தினார் .

தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சார்ந்த, வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்களது எழுச்சி உரை...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் குனங்குடி அனீபா அவர்களது எழுச்சி உரை.
ஆயிஷா அவர்களது எழுச்சி உரை.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவர் முகமது முனீர் அவர்களது எழுச்சி உரை..
இந்திய தேசிய லீக்கின் பொதுச்செயலாளர் தடா ரஹீம் அவர்களது எழுச்சி உரை
ஒருங்கிணைப்பாளர் சே. ஜே. உமர்கயான் அவர்களது எழுச்சி உரை...
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சதீஸ்குமார் பரமேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார்..
கலந்து கொண்ட மக்கள்